• Dec 07 2024

நயன்தாரா மீது தனுஷ் கொடுத்த வழக்கை தவிடு பொடியாக்கிய விக்கியின் வக்கீல்..! ஷாக் நியூஸ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு நடந்த விவாகரத்தை விட தனுஷ் நயன்தாராவுக்கு இடையே தொடரும் சச்சரவுகள் தான் பேசுப் பொருளாக காணப்படுகின்றது. இதனை மேலும் வலுவாக்கும் வகையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றையும் வைத்துள்ளார்.

அதாவது நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரின், பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் அழித்தீர்கள் என்றால் அதை கடனாக எடுத்துக் கொள்ளுங்கள்.. அது ஒருநாள் உங்களுக்கே வட்டியுடன் திரும்ப வரும் என்று கர்மா கூறுகிறது.. என குறிப்பிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மறைமுகமாக தனுஷை தான் குத்திக் காட்டுகின்றார் என்று கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து நடைபெற்ற நிலையிலேயே நயன்தாரா இவ்வாறு தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

d_i_a

மேலும் நயன்தாரா விக்கியின் திருமண டாக்குமென்டரி வெளியாவதற்கு இரண்டு வருடங்கள் ஆனது. அதற்கு காரணம் தனுஷ் தான் என்று நேரடியாகவே குற்றம் சாட்டி அறிக்கையை வெளியிட்டிருந்தார். எனினும் தனுஷ் தரப்பில் எந்தவித பதிலும் கொடுக்காமல் இறுதியில் நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்திருந்தார் தனுஷ்.


இந்த நிலையில், நயன்தாரா விக்கியின் வக்கீல் தனுஷ் தொடர்ந்த வழக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அவர் தெரிவிக்கையில், திருமண ஆவணத்தில் பயன்படுத்திய காட்சிகள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்றும், அது திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக விக்கி நயன்தாராவின் திருமண டாக்குமென்டரில் எந்த ஒரு பதிப்புரிமை சட்டங்களையும் மீறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 2-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement