2013 ஆம் ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் மத கஜ ராஜா. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தார்கள். எனினும் நிதி பிரச்சனை காரணமாகவே இந்த படம் கிடப்பில் போடப்பட்டது.
எனினும் ஒரு வழியாக பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆகியுள்ளது மத கஜ ராஜா. பொங்கல் ரைஸில் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலா இயக்கிய வணங்கான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனதால் விஷாலின் மதகஜராஜா திரைப்படம் என்ன ஆகும் என்ற அச்சம் காணப்பட்டது.
ஆனால் அதை எல்லாம் அடித்து நொறுக்கிய பொங்கல் வின்னராக மதகஜ ராஜா திரைப்படம் காணப்படுகின்றது. அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புடன் இந்த படத்தை கொண்டாடி வருகின்றார்கள். மதகஜராஜா படத்திற்கு பெரிய ப்ளஸே சந்தானத்தின் காமெடி தான். அவருடைய காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.
இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என்ற பீலை மதகஜ ராஜா திரைப்படம் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. கவர்ச்சியில் வரலட்சுமி மற்றும் அஞ்சலியும் புகுந்து விளையாடி உள்ளார்கள். ஆனாலும் முகம் சுளிக்க வைக்காத வகையில் அவர்களுடைய கவர்ச்சி காணப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மதகஜ ராஜா படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை பார்த்து தனது இணையதள பக்கத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து இருந்தார் சந்தானம். சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வந்தாலும் அவருடைய காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில், சந்தானம் அனைவருக்கும் நன்றி சொல்லி தெரிவித்த பதிவை பகிர்ந்த விஷால், டார்லிங் ஐ லவ் யூ.. இதுல ஹீரோயின் காம்போவை விட நண்பன் காம்போ கலக்குது.. என ட்விட் போட்டு உள்ளார். தற்போது அவருடைய பதிவு வைரலாகி வருகின்றது.
Darling love u. Fantastic response for our combo. Heroine combo vida namba combo dhaan kalakatudhu. https://t.co/DW5aEbsYd6
Listen News!