• Jan 18 2025

மகன் குடும்பம் பிரிந்ததை பார்த்து மகிழும் பூமர் விஜயா! மீனா புகட்டிய பாடம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து குடித்துவிட்டு வந்து படுக்க அதை பார்த்து மீனா கவலையில் நிற்கின்றார். இதன்போது அங்கு வந்த விஜயா இப்போதுதான் தனக்கு சந்தோஷமா இருக்குது இதைவிட பெரிதாகவும் எதிர்பார்த்தேன் என சொல்லி செல்கிறார்.

மறுநாள் அண்ணாமலை முத்துவ நினைக்க இப்பதான் சந்தோஷமா இருக்குது. அவனுக்கு நீ தான் பொறுப்பை கொடுத்து கவனிக்கிறார் என்று சொல்ல,  அப்போதுதான் முத்து எழும்புகிறார். மீனா காபி கொடுக்கவும் வேண்டாம் என செல்கின்றார்.

அதன் பின்பு முத்து கார் சாவியைத் தேட மீனா அதை ஒழித்து வைத்துவிட்டு இவருக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என சொல்கின்றார். அதன்படி அண்ணாமலை நீ நைட் நிதானமாக தான் வந்தியா எனக் கேட்க, ஆமா அவன் கால் தரையில் படாமலே வந்தான் என விஜயா சொல்லுகின்றார். இதனால் அண்ணாமலை அவரை பேசியதோடு இனிமேல் குடிச்சிட்டு வந்தா வீட்டுக்கு உள்ளே எடுக்காதே என மீனாவுக்கு சொல்லுகின்றார்.


இதைத்தொடர்ந்து முத்து சவாரிக்கு போகாமல் நிற்க, அங்கு முத்துவின் நண்பர்கள் அவருக்கு அட்வைஸ் பண்ணுகிறார்கள். அந்த நேரத்தில் மீனாவின் அம்மாவும் தங்கையும் அங்கு வந்து தாங்கள் மன்னிப்பு கேட்பதாகவும் மீனாவுடன் சமாதானமாக  இருக்குமாறு கேட்க, மீனா செய்தது தப்பு தான். என்னை மதிக்காத இடத்திற்கு வந்தது தப்புதான் என்று முத்து சொல்லிவிட்டு சவாரிக்கு செல்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement