• Jan 10 2025

மூணு மணிநேரமா நடந்த போராட்டம்..! இறுதியில் ஐ லவ் யூ சொன்ன பிக்பாஸ்.. யாருக்கு தெரியுமா?

Aathira / 14 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் எட்டு இன்னும் பத்து  நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், அதிர்ச்சி மேல் அதிர்ச்சியான சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. 

தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள எட்டு போட்டியாளர்களுடன் மேலும் எலிமினேட்டாகி வெளியே சென்ற பழைய போட்டியாளர்கள் எட்டு பேர் மீண்டும் போட்டிக்கு தயாராகி உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் எட்டுக்கான டைட்டில் வின்னருக்கான போட்டியில் தீபக், அருண், சௌந்தர்யா, முத்துக்குமாரன், விஷால், பவித்ரா, ரயான் ஆகியோர் காணப்படுகின்றனர். தற்போது எலிமினேட்டாகி உள்ளே வந்த போட்டியாளர்களுக்கு இருவரை எலிமினேட் பண்ணுவதற்கான அதிகாரத்தையும் வழங்கியுள்ளார் பிக்பாஸ். 

d_i_a

தற்போது பிக்பாஸ் வீட்டில் மாரத்தான் டாஸ்க் இடம் பெற்று வருகின்றது. இதன்போது  ரவீந்திரன் பார்த்திபன் கெட்டப் போட்டு ஆடியோ காட்சியும், சுனிதா சௌந்தர்யாவுக்கு இடையே இடம்பெற்ற டான்ஸ் போட்டியும் சுவாரஸ்யமாக காணப்பட்டது.

இந்த நிலையில், சுனிதா சௌந்தர்யாவிடம் நீ உள்ள இருக்கும்போது எவ்வளவு வெல்செட்டில் என்று தெரியாது.. ஆனால் வெளியே போன பிறகு தான் தெரிகின்றது நீ இவ்வளவு தூரம் வர டிஆர்பி டீம் தான் காரணம் என தெரிவித்து இருந்தார். இதனால் சௌந்தர்யா சுமார் மூன்று மணி நேரமாக அழுதார்.


இதன் போது பிக்பாஸ் அவரை தனியாக அழைத்து நீங்க கஷ்டப்படும்போது யார் உங்க கூட இருந்தாங்க? நீங்க பணத்தை இழந்த போது யார் உங்க கூட இருந்தாங்க என்று கேட்க, அதற்கு நான் தான் என்று சொல்லுகிறார்.

இதனால் யார் என்ன சொன்னா உங்களுக்கு என்ன என சௌந்தர்யாவை சமாதானப்படுத்தி ஐ லவ் யூ சொல்லி அனுப்பியுள்ளார் பிக்பாஸ் . தற்போது இது தொடர்பிலான வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement