• Jan 19 2025

அர்ச்சனாக்கு சாதகமா நகரும் பிக் பாஸ் ஸ்கிரிப்ட்? மீண்டும் உணர்ச்சிப் பூர்வமாக ஒன்றிணைந்த விசித்ரா! ஷாக்கில் புல்லி கேங்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. 

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இறுதியாக பிக்பாஸ் வீட்டில் நடந்த பூகம்பம் டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியே செல்வதும், அவர்களுக்கு பதிலாக இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வருவதும் உறுதியானது.


அதன்படி, வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் விஜய் வர்மா மற்றும் அனன்யா பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே நுழைய, அக்‌ஷயா மற்றும் பிராவோ ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜோவிகா நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு, வெளியேறினார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் கெத்து காட்டும் அர்ச்சனாவுக்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பு இருக்கும் நிலையில், பிக் பாஸ் ஸ்கிரிப்ட்டும் அவருக்கு சாதகமாக நகருவதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகின்றன.


அதுமட்டுமின்றி, ஆரம்பத்தில் அர்ச்சனாவுக்கு மிகவும் ஆதரவாக இருந்து, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற விசித்ரா கடந்த நாட்களில் அர்ச்சனாவுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தார். இதன் பொருட்டு ரசிகர்கள் அவர் மீது அதிருப்தி அடைந்தனர்.

எனினும், இன்றைய பிக் பாஸ் வீடியோ ஒன்றில் அவர் மீண்டும் அர்ச்சனாவோடு பழைய பந்தத்தில் இணைந்ததாக காட்டப்படுகிறது. குறித்த விடீயோவை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே பொறுத்து இருந்து பார்ப்போம். இனி மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்து புல்லி கேங்க்கு ஆப்பு வைப்பார்களா என்று..

Advertisement

Advertisement