• Jan 18 2025

''என் சைடு மிரர்ல தெரிஞ்ச பேய்.. அலறி அடிச்சு வீட்டுக்கு ஓடினான்'' திகில் அனுபவத்தை பகிர்ந்த அர்ச்சனா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து, படிப்படியாக பிரபலமடைந்தவர் தான் விஜே அர்ச்சனா.

விஜய் டிவியில் வெளியான ராஜா ராணி 2 சீரியலில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அந்த கேரக்டருக்கு ஏற்றமாதிரி வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தெடுத்தார் அர்ச்சனா.

இதைத்தொடர்ந்து திடீரென சீரியல் இருந்து வெளியேறி,  விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் அடிக்கடி வந்து போனார்.


இவ்வாறான  நிலையில், பிக் பாஸ் சீசன் 7ல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்று, இறுதியில் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னராக வெற்றி வாகை சூடினார்.

இந்த நிலையில், அண்மையில் அர்ச்சனா வழங்கிய பேட்டி ஒன்றில், தனக்கு நடைபெற்ற திகில் அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்குபெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி அவர் கூறுகையில், ஒரு நாள் ஷூட்டிங் முடிச்சிட்டு நைட் இரண்டு மணி போல வீட்டுக்கு போயிட்டு இருந்தேன். அப்போ என் வீட்டுக்கு பத்து நிமிஷத்துல போயிறலாம். 

நான் பேய் விஷயத்துல பொய் சொல்ல மாட்டேன். அப்போ ஹலுசினேஷனா? இல்ல பேயா?  என்று எனக்கு தெரியல. போய்கிட்டே இருக்கும்போது நூறு அடி மீட்டரில் ப்ளூ அண்ட் ஆஸ் ஷர்ட் போட்ட ஆள் ஒருத்தர் நின்னாரு...


அதை பார்த்துட்டு, நான் பயங்கர ஸ்பீடா கார ட்ரை பண்ணிட்டு போனேன். நான் போன ஸ்பீடுக்கு அவர எப்பவோ க்ரஷ் பண்ணிட்டு போயிருக்கணும் ஆனா 100 மீட்டருக்கு அவர் என்னோட இந்த கார் சைட்ல வந்துட்டே இருந்தாரு. அது எனக்கு சைட்  மிரர்ல தெரிஞ்சது. அதுக்கப்புறம் அந்த இடத்துல காணல. 

இத பாத்து பயந்து அலற அடிச்சுக்கிட்டு வீட்டுக்கு ஓடி போயிட்டன் என்று தனது திகில் அனுபவத்தை அர்ச்சனா கூறியுள்ளார்.

இவ்வாறு அர்ச்சனா பகிர்ந்து உள்ள இந்த அமானுஷ்ய கதை, அவருடைய ரசிகர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement