• May 17 2024

‘’விடாமுயற்சி’’ கதையை அஜித் இன்னும் கேட்கவில்லை… வலைபேச்சு அந்தணன் கொடுத்த அப்டேட்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் படத்திற்கு வழக்கமாக 'வி' சென்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகும் என்பதால், இந்த படத்திற்கும் விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எனினும் இதையடுத்து, இந்தபடத்தின் கதாநாயகி யார், வில்லன் யார், என்ன கதை, படப்பிடிப்பு எப்போது என அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் வலைப்பேச்சு அந்தணன் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அஜித் உடல் எடை அதிகரித்தது விடாமுயற்சி படத்திற்காகத்தான் என்ற பேச்சு எழுந்துள்ளது. மேலும்  அவர் படத்திற்காக உடல் எடையை அதிகரிக்கவில்லை. வேல்டு டூர் சென்றுள்ளதால், வழியில் கிடைக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டே வருவதால் உடல் எடை அதிகரித்துள்ளார்.

அத்தோடு , அவர் மே 8ந் தேதி சென்னைக்கு வந்துவிட்டார், படப்பிடிப்பிற்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால், கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று இயக்குநர் மகிழ் திருமேனி கேட்டுக்கொண்டால் நிச்சயம் குறைப்பார். அஜித் பல படங்களில் கேரக்டருக்காக உடல் எடையை குறைத்து இருக்கிறார் என்பதால், இது பெரிய விஷயம் இல்லை.

  விடாமுயற்சி என்ற பெயரைக் கேட்டதுமே இணையத்தில் பலவிதமான கதைகள் உலவி வருகிறது. உண்மையில் படத்தின் கதையை அஜித் இன்னும் கேட்கவே இல்லை. அத்தோடு அஜித்திற்கு முழுமையான இரண்டரை மணிநேர கதையை சொல்லுவதற்கு மகிழ் திருமேனி காத்து இருக்கிறார். 

அனேகமாக இரண்டு ஒரு நாளில் அஜித் முழுகதையையும் கேட்டுவிடுவார். அதேபோல படத்தின் கதையை பொருத்துத்தான் படப்பிடிப்பு எத்தனை நாளைக்கு நடக்கும் என்பதை சொல்ல முடியும் என்றார்.

Advertisement

Advertisement