• Jan 19 2025

பிக் பாஸ் மூலம் கிடைத்த கௌரவம்.. பிரம்மாண்ட நிகழ்வில் Chief Guest ஆக அழைக்கப்பட்ட ஐஷு போட்ட குத்தாட்டம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இன் கலந்து கொண்ட ஐஷு நீண்ட நாட்களுக்குப் பின் பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். தற்போது குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக கலந்து கொண்ட ஐஷு  டான்சராக காணப்பட்டவர். பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் நல்ல போட்டியாளராக விளையாடி வந்த ஐஷு வுக்கு நல்ல பான்ஸ் குரூப் உருவானது.

அதுக்கப்புறம் பிக் பாஸ் வீட்டில் நிக்சன் கூட ரொம்பவும் க்ளோசா பழக ஆரம்பிச்சாங்க. இதற்குப் பிறகு பிரதீப் விசயத்துல ரெட் கார்ட் கொடுத்த விவகாரத்தில் ஐஷு வும்  ஒருவராக காணப்பட ரசிகர்கள் இவரையும் வெறுக்கத் தொடங்கினர்.


பிக்பாஸ் வீட்டில் ஐஷு வும் நிக்சனும் செய்த காதல் லீலைகள் எல்லை மீற, ஐஷு வின்  பெற்றோர் பிக் பாஸ் செட்டிற்கே வந்து தங்களது மகளை வெளியே அனுப்புமாறு பிரச்சனை செய்தனர்.


இதை தொடர்ந்து அடுத்த வாரமே ஐஷு  பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இவ்வாறு வெளியே வந்த ஐஷு,  தான் செய்த தப்பை உணர்ந்து எழுதிய கடிதம்  ஒன்றில், தான் செய்த தவறை உணர்ந்ததாக கூறி  மக்களிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார்.


இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஐஷு , நீண்ட நாட்களுக்கு பின் பொது நிகழ்வு ஒன்றுக்கு சீப் கெஸ்ட் ஆக அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் ஆடிப்பாடி சந்தோஷமாக ஐஷு  காணப்பட்டுள்ளார். தற்போது இது தொடர்பிலான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக  வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement