• Jun 24 2025

அட்ஜெஸ்ட்மெண்ட் வேண்டாம் என்றால் வேண்டாம் தான்..! – நடிகை யோகலட்சுமியின் தைரியமான பேட்டி!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

அழகிய தோற்றத்துடனும் மாறுபட்ட கருத்துக்களாலும் ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகை யோகலட்சுமி. சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் அளித்த அபாரமான நடிப்பு மற்றும் உண்மைசொல்லும் மனப்பாங்கு தற்போது இணையத்தில் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.


அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், வெளியான சில நாட்களில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன், யோகலட்சுமியும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை யோகலட்சுமி சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ பற்றிய அவரது கருத்துகள் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.


பேட்டியில் தனது அனுபவங்களைப் பகிர்ந்த யோகலட்சுமி, “சினிமாவில் பெண்களுக்கு சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய நடத்தை, நம்முடைய பதில்கள் இவை எல்லாம் மிக முக்கியமானவை. சிலர் தவறாக கேட்பது போன்ற நிலைமை வந்து விட்டாலும், நாம் எப்படி இருக்கிறோமோ அதேபடியாக தான் இருக்க வேண்டும்.” என்றார்.

அவர் மேலும், “ உங்களுக்கு அது வேண்டும் என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் 'வேண்டாம்' என்று முடிவெடுத்தால், அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியமானது.” எனவும் தெரிவித்திருந்தார்.

யோகலட்சுமியின் இந்த நேர்மையான பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பாராட்டப்பட்டு வருகின்றது. பலரும் “சினிமா துறையில் உள்ள நிஜத்தை நேராக வெளிப்படுத்திய நடிகை” என்ற வகையில் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement