• Jan 19 2025

கொரோனாத் தொற்றால் நடிகர் விஜயகாந்த் மரணம்- பேரதிர்ச்சியில் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கேப்டன் என்று அழைக்கும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் நடிகர் விஜயகாந்த். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

புரட்சிகரமான வசனங்கள், கால்களால் எகிறி அடிக்கும் வித்தியாசமான சண்டைக் காட்சிகள் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். விஜயகாந்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே பல படங்கள் வெற்றி விழா கொண்டாடின. சினிமாவைப் போல ரியல் லைஃபிலும் ஹீரோவாகவே வலம் வந்தார் .


சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர், ஆரம்ப காலத்தில் அங்கேயும் தனக்கான தனி முத்திரை பதித்தார்.கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா, அரசியலில் தலை காட்டாமல் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் தேமுதிக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து தற்பொழுது விஜயகாந்த் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பேரதிர்ச்சியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement