• Apr 01 2025

அசுர வளர்ச்சி கண்ட நடிகர் சூரி, சன் டிவியின் சீரியல் நடிகரா? யாரும் அறியாத சீக்ரெட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்து நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூரி.

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் துணை நடிகராக அறிமுகமான இவர், "வெண்ணிலா கபடிக்குழு" என்ற திரைப்படம் மூலமே நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அதில் இவர் பரோட்டா கடையொன்றில் பந்தயத்திற்கு 50 பரோட்டா சாப்பிட்டு விட்டு கணக்கு பிழை முதலில் இருந்து ஆரம்பியுங்கள் என்ற காட்சி பெரியளவு வரவேற்பை இவருக்கு கொடுத்திருந்தது.

இதன் பின்புதான் இவர் "பரோட்டா சூரி" என்று அழைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் நடித்த பல படங்கள் ஹிட் கொடுத்தாலும் இவரது மார்க்கெட்டை உயர்த்தியது சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த திரைப்படங்கள் ஆகும். 


இவ்வாறு இவர் பல படங்களில்  நடித்து வந்தாலும் சமீபத்தில்  இவரது காமெடிகள் கிரிஞ் ஆக உள்ளது என ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையிலேயே,  வெற்றிமாறன் இயக்கத்தில் "விடுதலை" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக மிகவும் சீரியஸ் டோனில் நடித்து பலராலும் பாராட்டபட்டர். இதன் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.


இந்த நிலையில், நடிகர் சூரி ஆரம்பத்தில் சீரியலில் நடித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

அதாவது, ஒருகாலத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி TRP ரேட் அதிகமாக கிடைத்த பிரபலமான சீரியல் தொடரே "திருமதி செல்வம்" ஆகும். இதில் பலர் நடித்திருந்தாலும்  தற்போது சினிமாவில் பிரபலாக இருக்கும் பரோட்டா சூரி ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement