• Oct 30 2024

மோசடி கும்பலை நம்பி ரூ.17 லட்சத்தை பறிகொடுத்த நடிகர் டேனியேல்- வீட்டு வாடகை கட்டாததால் ஏற்பட்ட பிரச்சினை

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்னும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பரீட்சயமானவர் தான் நடிகர் டேனியேல். இப்படத்தில் இவர் பிரெண்டு லவ் மேட்டரு.. பீல் ஆயிட்டாப்ல ஆப் சாப்பிட்டா கூல் ஆயிடுவாப்ல என்ற வசனத்தை பேசி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இதன் பின்னர் சில படங்களில் நடித்தாலும் சரியான படவாய்ப்புக் கிடைக்காததால் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து தனது காதலியான டெனிஷாவை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது. 


இந்நிலையில், நடிகர் டேனியல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசடி கும்பல் ஒன்று தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார். அதில், நான் நோ புரோக்கர் ஆப் மூலம் சென்னையில் வீடு வாடகைக்குத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது, எஸ்.டி.எஸ்.கே பிராப் டெக் என்ற நிறுவனம் என்னை தொடர்பு கொண்டு 17 லட்சம் எங்களிடம் செலுத்தினால் வீட்டை லீசுக்கு பார்த்து தருவதாக கூறினார்கள்.

இதற்கான ஆதாரத்தையும், சென்னையில் லீசுக்கு இருக்கும் சிலரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். மாதா மாதம் வீட்டு வாடகையை தாங்கள் செலுத்தி விடுவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுத் தொகையை திரும்பச் செலுத்தி விடுவதாகவும் கூறியதன் அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு பணத்தை கொடுத்து போரூரில் வீடு ஒன்றுக்கு வாடகைக்கு சென்றேன். 


ஆனால், மூன்று மாதத்திற்கு பிறகு வீட்டின் உரிமையாளர் வாடகை வரவில்லை என்று கூறி வீட்டை காலி செய்ய சொன்ன போது தான், நான் ஏமாற்றப்பட்டது எனக்கு தெரிந்தது பெங்களுரைச் சேர்ந்த அந்நிறுவனம் பலரை இப்படித்தான் ஏமாற்றி உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருக்கிறேன் என தெரிவிததுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement