நடிகை விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறிய நிலையில் எத்தனை கோடி கொடுத்தாலும் வில்லனாக நடிக்க போவதில்லை என்றும், இந்த முடிவை எடுத்ததற்கு சில வெளியே சொல்ல முடியாத காரணம் இருக்கிறது என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். எனவே இனிமேல் அவர் ஹீரோவாக மட்டுமே நடிப்பார் என்றும் ஹீரோவுக்கான கதையை மட்டுமே தேர்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வில்லனாக நடிக்க முடியாது என்ற கொள்கையை பின்பற்ற தொடங்கிய விஜய் சேதுபதி, ஒருமுறை நடித்த ஹீரோயின் உடன் இன்னொரு முறை நடிக்க வேண்டாம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கொடுத்த அறிவுரையின் காரணமாக ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு ஹீரோயின் என்ற கொள்கையையும் எடுத்துள்ளாராம்.
அதன்படி தான் அவர் நடித்து முடித்துள்ள ’மகாராஜா’ திரைப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அபிராமி நடித்திருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் நடித்து வரும் ’ஏஸ்’ திரைப்படத்தில் ருக்மணி வசந்துடன் நடிக்கிறார். இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ’ட்ரெயின்’ திரைப்படத்தில் ஐரா தயானந்த் என்பவரை தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
ஐரா பெங்களூரில் படித்து வளர்ந்த நிலையில் மாடலிங் தொழிலில் இருந்தவர் என்றும் இவரை சினிமாவுக்கு விஜய் சேதுபதி அழைத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் ஹிட்டானால் தமிழ் சினிமாவில் ஒரு சுற்று வருவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் ’விடுதலை 2 ’படத்தில் விஜய்சேதுபதிக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வில்லனாக நடிப்பதில்லை மற்றும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு புதிய ஹீரோயின் என்ற இரண்டு புதிய கொள்கைகளை எடுத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு இனிமேலாவது வெற்றிப் படங்கள் தொடருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!