• Apr 15 2026

’கோட்’ என்ன வெங்கட்பிரபுவின் குடும்ப படமா? யுவன், பிரேம்ஜியை அடுத்து இன்னொருவர்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

பொதுவாக வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் அவரது சகோதரர் பிரேம்ஜி இருப்பார் என்றும் அதேபோல் அவரது படத்திற்கு பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார் என்றும் தெரிந்தது. ஆனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும்கோட்திரைப்படத்தில் வெங்கட் பிரபுவின் இன்னொரு குடும்ப உறுப்பினர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாகவும் சமீபத்தில் கூட இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ரஷ்யா சென்று லொகேஷன் பார்த்ததாகவும் கூறப்பட்டது. எனவே இன்னும் ஒரு சில நாட்களில் விஜய் உள்பட படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் அங்கு ஒரு அதிரடி ஸ்டண்ட் காட்சி மற்றும் விஜய், த்ரிஷா பாடல் காட்சி படமாக்கப்பட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் அவரது இன்னொரு சகோதரர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒரு பாடலை வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் எழுதியிருப்பதாக அவரே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த படத்தில் சில காட்சிகளில் நீங்கள் நடித்துள்ளீர்களா? என்று கேட்டதற்குநான் நடிக்கவில்லை, ஆனால் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன், அந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வெங்கட்  பிரபுவின் குடும்ப படமாகோட்என நெட்டிசன்கள் நகைச்சுவையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement