பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கலந்து கொண்டவர் தான் மஞ்சரி. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான மேடைப்பேச்சுகளில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவராக காணப்பட்டார்.
இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்ட மஞ்சரி, வலிமையான போட்டியாளராக காணப்பட்டார். இவர் சுமார் 90 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் தாக்குப் பிடித்தார்.
மஞ்சரியின் எலிமினேஷன் எதிர்பாராத ஒரு சம்பவமாக காணப்பட்டது. இவர் இறுதியாக காணப்பட்ட எட்டு போட்டியாளர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டியாளராகவும் டாஸ்க்களில் தனது விடாமுயற்சியால் வெற்றி பெற்ற போட்டியாளராகவும் காணப்பட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் இவரது எலிமினேஷனுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்கள்.
இறுதியாக மஞ்சரி வெளியேறும் போது கூட அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதன்போது யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்குமாறு மிகவும் பண்பாக பேசியிருந்தார். முத்துக்குமரன் கூட மஞ்சரி எனக்கு ஒரு அக்காவாக வேண்டும் என்று எமோஷனலாக பேசி இருந்தார்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மஞ்சரிக்கு அவருடைய ஊர் மக்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள். தற்போது இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மஞ்சரி.
இதேவேளை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஞ்சரி எலிமினேட் ஆனது இதுவரையில் unfair ராகவே பார்க்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!