• May 10 2024

லியோ படப்பிடிப்பிலிருந்து த்ரிஷா வெளியிட்ட போட்டோ- ஒட்டுமொத்த வதந்தியும் குளோஸ்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் லியோ படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார் த்காஷ்மீரில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட மூன்றே நாளில் நடிகை திரிஷா காஷ்மீரில் இருந்து கிளம்பியதாக செய்திகள் வெளியானது. ரிஷா. இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மூணாறிலும் நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி வருகின்றனர்.

இதற்காக கடந்த மாத இறுதியில் படக்குழுவினர் அனைவரும் தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு பறந்து சென்றனர். அப்போது நடிகை த்ர்ஷாவும் உடன் சென்றிருந்தார்.அதனால் அவரது ரோல் மிக சிரியதா அல்லது அவர் இயக்குநரிடம் சண்டை போட்டுவிட்டு கிளம்பிவிட்டாரா என பல வதந்திகள் கிசுகிசுக்கப்பட்டது.


ஆனால் இது உண்மையில்லை என்பதை நடிகை த்ரிஷாவின் தாயார் உமா சமீபத்திய பேட்டி மூலம் உறுதிப்படுத்தினார். இருப்பினும் அவர் காஷ்மீரில் இருந்து டெல்லி வந்து தங்கி இருந்தது ஏன் என்கிற கேள்வி எழுந்து வந்தது.இப்படி வரும் எல்லா வதந்திகளுக்கு த்ரிஷா தற்போது முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

விஜய் உடன் அவர் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து அவர் படத்தில் இருப்பதை மீண்டும் உறுதி செய்து இருக்கிறார். அதனால் தற்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 






Advertisement

Advertisement

Advertisement