• Apr 01 2025

சன் டிவிக்காக ஜெயிலர் பட சான்ஸை தவறவிட்ட சீரியல் நடிகை! இப்போ ஃபீல் பண்ணலாமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலையும் வாரிக் குவித்திருந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்தப் படத்தின் வெற்றி கொண்டாட்டத்திற்கு வெளியீடாக, தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்கள் மற்றும் லாபத்தில் பங்கு செக் கொடுக்கும் அளவுக்கு இந்த படம் வசூலை வாரிக் குவித்து இருந்தது.

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக மிர்னா மேனன் என்ற நடிகை நடித்திருந்தார். அவருக்கு இந்த படம் மிகப்பெரிய புகழையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இதை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.


இந்த நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடிக்கும் வாய்ப்பு முதலில் சன் டிவி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு தான் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

ஆனாலும் அவர் கயல் சீரியலில் நடித்துக் கொண்டே ஜெயிலர் படத்திற்கு தேதிகள் ஒதுக்க முடியாத நிலையில், அதை மறுத்து விட்டாராம் .


அதற்குப் பிறகு தான் குறித்த கேரக்டரில் நடிப்பதற்கு மிர்னா மேனனை நாடி உள்ளார்கள்.

இவ்வாறு ரஜினி படத்தில் கிடைத்த சான்ஸை மிஸ் பண்ணியது பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சைத்ரா ரெட்டி கூறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement