• Apr 02 2025

இந்த சீரியல முடிச்சு எங்களுக்கும் கொஞ்சம் நல்லது பண்ணுங்க... ப்ளீஸ்..! கதறும் ஃபேன்ஸ்..!! அடுத்த ப்ரோமோ ரிலீஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், தற்போது கோபிக்கு வேலை இல்லை என்ற விஷயம் வீட்டாருக்கு தெரியவர, கோபி கண்கலங்கி அழுகிறார்.

இதையடுத்து தற்போது வெளியான ப்ரோமோவில், ஈஸ்வரியும் ராமூர்த்தியும் ரூமில் இருக்க, அங்கு நகைகளுடன் வந்த பாக்கியா, இத உங்க பையன் கிட்ட கொடுத்து ஏதாவது பண்ண முடியுமா என பாருங்க என சொல்கிறார்.



அதற்கு கோபியின் அப்பா, இந்த சூழ்நிலைல இருந்து அவன் வெளிய வரணும் என்று தான் நினைக்கிறோம். அதற்காக ஈஷ்வரி உனக்கு தந்த நகைய திருப்பி கொடுக்கிறது சரி இல்லை என கூறுகிறார்.

அதற்கு பாக்கியா, உங்க பையனுக்கும் எனக்கும் எதுவுமே இல்ல ஆனாலும், அவர் கஷ்டப்படணும்னு நான் எப்பவுமே நினைச்சதே இல்ல மாமா. இதை அவருக்கு கொடுங்க என சொல்கிறார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.

இதேவேளை, பாக்கியலட்சுமி சீரியல் தற்போது மிகவும் சலிப்பாக போவதாகவும் ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement