பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள "எம்புரான்" படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளதுடன் தற்போது வசூலில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.மேலும் படத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் காட்சிகளின் மீதான கவனம் இருந்தாலும் படக்குழு அவற்றை கவனித்து அவை படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
மேலும் இப் படம் ஒரு சில நாட்களுக்குள் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது இந்த படம் இந்திய சினிமாவில் மட்டுமின்றி உலகலாவிய ரீதியில் பல பரவலான பாராட்டுகளை பெற்று வருகின்றது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான கோகுலம் மூவிஸ் மற்றும் இயக்குநர் இருவரது வீட்டிலும் ஈடி ரைடு விசாரணை செய்வதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் ஒரு சில காட்சிகள் வரித்துறை சம்மந்தமாக வருவதால் குறித்த காட்சிகள் நீக்கிய பின்னரும் ஜடி ஆபிசில் இருந்து இன்றும் விசாரணைக்கு ஆட்கள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!