• Jan 19 2025

அயலான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு குடும்பத்துடன் வந்த சிவகார்த்திகேயன்- ஆராதனா இவ்வளவு பெரிதாக வளர்ந்திட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இப்படத்தின்  இசை வெளியீட்டு விழா, தற்போது மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஏலியன் கதை களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இஷா கோபிகர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 


யோகி பாபு, கருணாகரன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாகவுள்ளதான் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள தாஜ் கோரமாண்டலில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் இசை வெளியீட்டு விழாவில் லைவ் பெர்ஃபாமன்ஸ் செய்கிறார். மேலும்  இசை வெளியீட்டு விழாவிற்கு, நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி தன்னுடைய மகள் ஆராதனா மற்றும் மகன் குகனுடன் வந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement