• Jan 19 2025

இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் காரை மோசமாகத் தாக்கிய நபர்- இறுதியில் என்ன நடந்திச்சு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் ஏ.எல் விஜய். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து  ஆர்யாவை வைத்து மதராசப்பட்டினம் என்னும் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

விஜய்யை வைத்து தலைவா, பிரபு தேவாவை வைத்து தேவி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி, சாய்ஷா நடித்த வனமகன் போன்ற பல படங்களை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் ஹிட் லிஸ்டில் இணைந்த நிலையில் ஒரு சில படங்கள் மட்டுமே அதிர்ச்சி தோல்வியை தழுவியது.


தற்போது அச்சம் என்பது இல்லையே என்கிற படத்தை நடிகர் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ளார்.இது தவிர அண்மையில் 

புது வீடு கட்டி அதில் குடியேறி இருக்கிறார். அதன் கிரஹப்ரவேசத்திற்கு பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இன்று காலை ஏ.எல்.விஜய் காரில் சென்றபோது எதிரில் தவறான பாதையில் பைக்கில் வந்த நபர் மீது காரின் கண்ணாடி உரசிவிட்டதாம். அது தொடர்பாக ஏ.எல்.விஜய்யின் காரை ஹெல்மெட் கொண்டு அந்த நபர் தாக்கி இருக்கிறார்.


அதன் பின் உள்ளே இருந்த விஜய் மற்றும் அவரது மேனேஜர் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறார். இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்தே போலீசுக்கு ஏ.எல்.விஜய் தகவல் கொடுத்து இருக்கிறார். அதன் பின் நேரடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துவிட்டு தான் அவர் வந்திருக்கிறார்.

நான் இருந்த இடத்தில் ஒரு பெண் இருந்திருந்தால் குடிபோதையில் வந்த அந்த நபரை எப்படி சமாளித்து இருப்பார். அதனால் தான் போலீசில் புகார் அளித்திருக்குகிறேன் என விஜய் பேட்டி கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement