• May 17 2024

சிம்பு பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை- உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

stella / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்புவின் 48-வது படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படம் ரூபாய் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இது ஒரு புறம் சிம்பு அடிக்கடி பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.அந்த வகையில் சமீபத்தில் சிம்பு மீது ரெட் கார்டு தடை போட உள்ளதாக தகவல் வெளியானது. 


அதாவது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் சிம்பு இருவரும் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தனர்.அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் ஆகிய படங்களில் சிம்புவை ஒப்பந்தம் செய்திருந்தது வேல்ஸ் நிறுவனம். மேலும் இந்த இரண்டு படங்களுக்கும் 9.5 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில் 4.5 கோடி முன்பனமாக சிம்பு பெற்றிருந்தார் என கூறப்படுகிறது.

இதில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா குமார் படத்திற்கு சிம்பு சரியான தேதி ஒதுக்கவில்லை என வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக ஒரு கோடி ரூபாய் முன்பணமாக கொரோனா குமாருக்கு வாங்கிய பணத்தை கொடுக்க வேண்டும் என முறையிடப்பட்டது.


மேலும் இன்று இந்த வழக்க விசாரணைக்கு வந்தபோது கொரோனா குமார் படத்திற்காக வேல்ஸ் நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் பணத்தை சிம்பு திருப்பி கொடுக்க தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஏனென்றால் சிம்பு நடிக்க தயாராக இருந்தும் அந்த வருடத்திற்குள் படத்தை எடுக்காமல் இருந்தது தயாரிப்பு நிறுவனத்தின் மீதுதான் குற்றம்.

இதனால் சிம்பு எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளனர். ஆகையால் சிம்பு இப்போது தனது அடுத்த அடுத்த படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement