• Dec 03 2024

திருநங்கையாக நடிப்பில் அசத்தும் சாண்டி மாஸ்டர்- லியோ படத்தை விட பயங்கரமாக இருக்குதே....

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்னும் ரியாலிட்ரி ஷோ மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் சாண்டி.இதனைத் தொடர்ந்து பல நடன நிகழ்ச்சிகளில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தார்.

தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுக்கு டான்ஸ் மாஸ்டராகவும் கடமையாற்றி இருக்கின்றார்.இருப்பினும் இவரை பிரபல்யமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதனால் இதில் குருநாதா, குருநாதா என பிக்பாஸை சாண்டி அழைக்கும் விதம் அனைவருக்கும் பிடித்திருந்தது.


மேலும் விக்ரம் படத்தில் பத்தல பத்தல பாடலுக்கு கமலை ஆட வைத்ததன் மூலம் இன்னும் மக்களின் பேராதரவை பெற்றார்.தொடர்ந்து லோகேஷ்  கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் சாண்டி நடிக்க உதவியாக இருந்தது.

அந்தப் படத்தில் வில்லனாக நடித்து முதல் ஷார்ட்டிலேயே அனைவரையும் மிரள வைத்தார் அதுவும் காஃபி. காஃபி என சொல்லி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தார் சாண்டி. இந்த நிலையில் இன்று அவரின் கன்னட படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியிருக்கிறது.


ஆண்டாள் என்ற கேரக்டரில் திரு நங்கையாக நடிக்கும் அந்த கன்னட பட போஸ்டரை  சாண்டி இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டர் தற்பொழுது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement