• May 17 2024

இல்லை இது வேண்டாம்..இந்த பாட்டு தான் வேணும்... பிக் பாஸ் ஏ.டி.கேவிடம் கேட்ட ஏ.ஆர்.ரகுமான்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு பிரபலமானவர் ராப் பாடகர் ஏ.டி.கே.எந்த வாரமும் இல்லாத அளவிற்கு கடந்த வாரம்தான் அவருடைய எதிர்ப்புக் குரலும் பங்களிப்பும் அதிகமாக இருந்தது என்றே கூறலாம்.நேற்றைய எபிசோடில் கூட கமல் ஹாசன் அவரை சுதந்திரமாக ராப் பாடல் பாடுங்கள் என்று பாராட்டி இருந்தார்.

சிறு வயதில் பாடல்கள் என்றாலே பிடிக்காதாம் ஏ.டி.கேவிற்கு. அக்னி நட்சத்திரம் படத்தில் இருந்த ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்ற பாடலும், ஒஜே ஒஜாயே என்கிற சிங்கள பாடலை மட்டும்தான் அவர் கேட்பாராம். அத்தோடு ஒஜே ஓஜாயே படலை வைத்துதான் தெனாலி படத்தில் ஓஜாயே பாடல் வரிகள் எழுதப்பட்டிருக்கும் என்பது கூடுதலான செய்தி. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத நிலையில் என்ன செய்யலாமென்று முயற்சித்தபோதுதான் தனக்குள் இருந்த பாடகனை கண்டுபிடித்திருக்கிறார் ஏ.டி.கே.

மேலும்  ஒரு இசை ஆல்பம் மூலம் தன்னுடைய ஊரில் பிரபலமடைந்த ஏ.டி.கே அதன் பின் ஏற்கனவே உலகளவில் வெற்றி பெற்ற சுராங்கனி பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார். 

அந்தச் சமயம் விஜய் ஆண்டனியும் அந்த பாடலை ரீமிக்ஸ் செய்யப்போவதாக கேள்விப்பட்டு தமிழ் சினிமாவில் அந்த பாடல் வந்தால் மிகப் பெரிய வெற்றி பெற்றுவிடும். நம்முடைய முயற்சி வீணாகிவிடும் என்ற அச்சத்தில் விஜய் ஆண்டனியை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டுள்ளார். ஏ.டி.கேவின் பாடல்கள் விஜய் ஆண்டனிக்கு பிடித்து போனதால் TN-07 AL 4777 படத்தில் ஆத்திச்சூடி பாடலை கொடுத்து அறிமுகப்படுத்தினார்.மேலும்  அந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்ற வேண்டுமென்று பலமுறை முயற்சி செய்தும் அவருடைய மேனேஜர் பார்க்கவிட்டதே இல்லையாம். இறுதியாக சிந்துபாத் படத்தில் அவருடைய இசையில் பாடினார். தான் ஒரு அஜித் ரசிகன் என்பதால் அஜித் படத்திற்கு ஒரு பாடல் பாட வேண்டுமென்பதும் அவருடைய விருப்பமாம். ஏ.ஆர்.ரகுமான், யுவன், விஜய் ஆண்டனி, இம்மான், சந்தோஷ் நாராயணன் போன்ற பலருடன் பணிபுரிந்துள்ள ஏ.டி.கே, அனிருத்துடன் பணிபுரிய ஆவலாக உள்ளார்.

ஏ ஆர் ரகுமான் இமெயில் எப்படியோ கிடைத்தபோது, தன்னுடைய பாடல்களை அனுப்பி ஏ.டி.கே வாய்ப்பு கேட்டுள்ளார். அழைப்பு வந்தபோது அவரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். 

இதன் பின்னர் கடல் படத்தில் பாடல் எழுதி பாட அழைத்திருக்கிறார் ரகுமான். முதலில் ஆர்வப்பட்டு, ரஹ்மானின் 'நோ பிராப்ளம்' வரிகள் போல் எழுதிக் கொடுக்க,"இல்லை இல்லை இது வேண்டாம். போராட்டக்காரர் பாடும் வகையில் நீங்கள் எழுதும் உங்கள் தனித்துவமான வரிகள்தான் வேண்டும்" என்று கேட்க அப்படி எழுதியதுதான் மகுடி பாடல். அதன் பின் லிங்கா, ஓ காதல் கண்மணி, அச்சம் என்பது மடமையடா, மெர்சல் உள்ளிட்ட பல பாடல்கள் அவரது இசையில் எழுதி பாடியிருக்கிறார் ஏ.டி.கே.

Advertisement

Advertisement