• Jan 17 2025

படமும் சரியாக போகவில்லை! தொடர் தோல்விகள்! எமோஷனலான ஜெயம் ரவி!

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ஜெயம் ரவி தற்போது காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 14ம் திகதி ரிலீசாகிறது. சமீபத்திய பேட்டில் தனது தோல்வி குறித்து எமோஷனலாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனது தொடர் தோல்விகள் குறித்த பேசியுள்ளார் ஜெயம் ரவி .


அவர் கூறியதாவது "வெற்றி இல்லாமல் தோல்வியும் இல்லை, தோல்வி இல்லாமல் வெற்றியும் இல்லை. மூன்று வருடங்களாக ஒரே படத்தில் நடித்து வந்தேன். படமும் சரியாக போகவில்லை. அதன்பின் நான் யோசித்து பார்த்தேன், நான் எதாவது தவறு செய்து இருக்கிறேனா, நான் தவறான கதைகளை தேர்வு செய்தேனா என்று யோசிக்கும் போது என் தரப்பில் இருந்து எந்த ஒரு தவறும் இல்லை என்று கூறினார்.


மேலும் பேசுகையில் " அந்த தோல்வியின் பின்னர் அதற்கு அடுத்த வருடம் 2015ல் தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், பூலோகம் என தொடர்ந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்தேன். வெற்றிக்கும் தோல்விக்கு பெரிய வித்தியாசம் இல்லை. ஒருவர் தோல்வியடைந்து கீழே விழுந்துவிட்டால் அது தோல்வியாகிவிடாது. அவர் மீண்டும் எழுந்திருக்காமல் இருந்தால்தான் அது தோல்வி இல்லை . இந்த வருடம் நான் மீண்டும் எழுந்துவிடுவேன்" என்று எமோஷனலாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement