• May 20 2024

அசிங்கப்படுத்திப் பேசிய விஜயாவுக்கு பதிலடி கொடுத்த மீனா,திகைத்துப் போய் நின்ற முத்து- Siragadikka Aasai Promo

stella / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஸ்ருதியின் அம்மா ஸ்ருதிக்காக தங்க நகைகளைக் கொண்டு வந்து கொடுக்கின்றார்.அப்போது அண்ணாமலை வரதட்சணை கொண்டு வந்து கொடுப்பது போல இருக்கே என்று சொல்கின்றார்.

தொடர்ந்து அவர் உங்க மூத்த மருமகள் நிறைய நகை கொண்டு வந்திருப்பா தானே அதே மாதிரி உங்களுடைய இரண்டாவது மருமகள் என்ன கொண்டு வந்தா எனக் கேட்க விஜயா அவளுக்கு நாம தான் நகையே போட்டு கூட்டிட்டு வந்தோம் என்கின்றார்.

இதைக் கேட்ட, மீனா நகைகள் எல்லாவற்றையும் கழட்டி மேசையின் மீது வைத்து விட்டு,இனிமேல் என்னுடைய உடம்பில் நகை போட்டால் அது என் புருஷன் சம்பாதித்த காசில தான் இருக்கும் என்கின்றார். இதைக் கேட்டு அண்ணாமலை அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement