• Sep 13 2024

கழுகு பசிச்சா இரை தேடி கீழே வரணுமா? ரத்னகுமாருக்கு ஆப்பு வைத்த லோகேஷ் கனகராஜ்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரத்னகுமார் ’லியோ’ படத்தின் வெற்றி விழாவில் ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ’தலைவர் 171’ படத்தில் பணிபுரிய மாட்டார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் வீடியோ வெளியான நிலையில் இந்த வீடியோவுக்கு ரத்னகுமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று அவர் கூறியிருந்த நிலையில் அவரது பதிவுக்கு கீழே விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் கமெண்ட்களில் மோதிக்கொள்ளும் காட்சிகளை காண முடிகிறது.

’லியோ’ படத்தின் வெற்றி விழாவில் 'என்னதான் கழுகு மேலே பறந்தாலும், இரைதேட  கீழே வந்து தான் ஆக வேண்டும்’ என்று பேசிவிட்டு இப்போது ரஜினிக்கு வாழ்த்து கூறுகிறாயா? உன்னுடைய வாழ்த்து எங்களுக்கு தேவை இல்லை என்று ரஜினி ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

அதேபோல் விஜய் ரசிகர்கள் நேற்று வெளியான வீடியோவில் ’முடிச்சிடலாமா’ என்று கடைசியாக ஒரு வசனம் இருந்ததை அடுத்து ’ரஜினியை ’முடிச்சிடலாம்’  என்று ரத்னகுமாருக்கு ஆறுதல் கூறும் வகையில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.



இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஒவ்வொரு படத்திலும் ரத்னகுமாரை திரைக்கதை வசனம் எழுதும் குழுவில் இணைத்துக் கொள்ளும் நிலையில் கழுகு காக்கா பிரச்சனை காரணமாக அவரை ’கூலி ’ படத்தில் இருந்து கழட்டி விட்டுவிட்டார். இந்த நிலையில் தற்போது ரத்னகுமாருக்கு பதிலாக சந்துரு அன்பழகன் என்பவரை தனது திரைக்கதை எழுதும் குழுவில் இணைத்துள்ளார். இவர் ஏற்கனவே ’மாவீரன்’ படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியதன் மூலம் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த படமும் இப்போதைக்கு இல்லை என்றும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக ’கூலி’ படம் முடியும் வரை ரத்னகுமாருடன் லோகேஷ் கனகராஜ் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டார் என்றும் இந்த படம் முடிந்து ரிலீஸ் ஆன பிறகு ஒருவேளை ‘கைதி 2’ படத்தின் பணிகளில் வேண்டுமானால் ரத்னகுமாரை இணைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அதுவரை ரத்னகுமாருக்கு ஆப்பு தான் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement