2025 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. சினிமா உலகில் தலை சிறந்த விருதாக ஆஸ்கர் விருது காணப்படுகின்றது.
உலக திரையுலகத்தில் வெளியாகும் படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய ஆஸ்கர் விருது ஆண்டு தோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றது. அதன்படி அடுத்த ஆண்டு நடைபெறும் 97வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் லாபடா லேடிஸ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.
d_i_a
இந்த நிலையில், துரதிஷ்டவசமாக லாபடா லேடிஸ் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவின் அதிகாரபூர்வ நுழைவு பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது மொத்தமாக 85 படங்கள் ஆஸ்கர் விருதுக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. அதில் இறுதி பட்டியலுக்காக 15 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவற்றுள் கிரண் ராவ் இயக்கிய லாபடா லேடிஸ் திரைப்படம் தற்போது நுழைவுப் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
எனினும் 'சந்தோஷ்' என்ற ஒரு மற்றொரு இந்தி மொழி திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவுள்ளது. இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற 77 வது கேன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!