• Jun 13 2026

ஸ்ருதி ஹாசனுடன் Vibe செய்த சாய் அப்யங்கர்.. லீக்கான வீடியோ

shali / 2 months ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் வெளியிட்ட புதிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அவர் தனது 5-வது இசை ஆல்பமாக பவளமல்லியை வெளியிட்டிருந்தார். இந்த ஆல்பத்தில் கயாடு லோஹர் நடித்திருந்ததுடன், ஸ்ருதிஹாசன் இணைந்து பாடியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.


அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இந்தப் பாடல் வெளியானதும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், 7 கோடி பார்வைகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இந்த பாடல் தென்னிந்திய அளவில் வைரலாகி, ரீல்ஸ் வடிவில் டிரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது. பலரும் இந்த பாடலை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாய் அப்யங்கர் தற்போது ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவும் ரசிகர்களிடையே விரைவாக பரவி வருகிறது. குறிப்பாக ஷ்ருதி ஹாசனின் தனித்துவமான குரல் இந்த பாடலுக்கு மேலும் ஒரு அழகை சேர்த்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

Advertisement

Advertisement