• Apr 18 2026

பாலரம்மா நல்லா பத்த வைப்பா... முத்துவை கடுப்பாகிய ரோகிணி! ஸ்ருதி போட்ட கண்டிஷன்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், மனோஜ் இருக்கும் கோலத்தை பார்த்து வீட்டார் கவலைப்படுகிறார்கள். ரோகிணி எல்லார் முன்னிலையிலும் உனக்கு நான் இருக்கேன் என சொல்லிவிட்டு, ரூம்க்கு கூட்டிப்போய் அடிக்கிறார். மேலும் உனக்காக தான் நான் வாழுறேன். இனி இப்படி செய்யாத என சொல்லுகிறார்.

மறுப்பக்கம் ஸ்ருதி, ரவியை பார்க்க ஹோட்டலுக்கு செல்கிறார். அங்கு வா  வீட்டுக்கு போவம் என கேட்க, நான் வர மாட்டேன் என்று சொல்லுகிறார். பிறகு உன் வீட்டுக்கு தான் போவம் என சொல்ல, ரவி சந்தோசப்படுகிறார்.


இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா, ஸ்ருதி வீட்டை விட்டு போனதை நினைத்து வருந்த, அவரின் அப்பா சிரிக்கிறார். எப்படியும் ஒரு நாள் அவள் ரவியை வெறுத்து வருவாள் என சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து ஸ்ருதி, ரவி வீட்டுக்கு வர, எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். ஆனாலும் ரோகிணி, இவங்க வந்துட்டாங்க, இனி எனக்கு தனியா தானே பிரச்சினை வந்துடும் என்று ஸ்ருதிக்கு பத்த வைக்கிறார். ஆனாலும் ஸ்ருதி முடிஞ்சது முடிஞ்சது தான் இனி அத பத்தி பேச வேண்டாம் என கேக் வெட்டி கொண்டாடுகிறார்.

அதன்பின், மனோஜ், முத்து, ரவி ஆகியோர் கல்யாணத்துக்கு முன்னுக்கு எப்படி இருந்தோம் இப்ப எப்படி இருக்கோம் என பேசிக் கொள்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement