பிரேம்குமார் இயக்கத்தில் திரிஷா மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் வெற்றி பெற்ற திரைப்படம் 96 .இப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் சேதுபதியின் அடுத்த படம் ஒரு பேன் இந்தியா படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தினை ஜெகநாத் இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவர் தற்போது நடிகர் நடிகைகளை தெரிவு செய்யும் வேளையில் இறங்கி இருப்பதாகவும் சமீபத்தில் தபுவை கமிட் பண்ணி உள்ளார். மற்றும் இந்த படத்தின் கதாநாயகியாக திரிஷாவை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இன்னொரு பக்கம் இயக்குநர் திரிஷாவை வைத்து படம் பண்ணுவதற்கு தயக்கம் காட்டி வருவதாகவும் ஏனெனில் 96 இரண்டாம் பாகம் இதே நேரத்தில் தயாராக இருப்பதால் அடுத்தடுத்து ஒரே ஜோடி நடிப்பில் படங்கள் வெளியாகினால் அது எந்த அளவுக்கு சாத்தியம் ஆகும் என ஒரு சிறிய குழப்பத்தில் படக்குழு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
Listen News!