• Sep 14 2025

குழந்தைக்கு ஊசி போட்ட மாதிரி ஸ்மூத்தா பாட வச்சாரு..! ஓபன் டாக் கொடுத்த வாகீசன்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

'மருதமோ எந்தன் காவியமோ' மற்றும் 'ஜினுக்கு சிங்காரி' போன்ற பாடல்கள் மூலம்  சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலம் ஆனவர்  தான் இலங்கை ராப் பாடகர் வாகீசன். 

இவருடைய பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தன.  தற்போது வினோத் ராஜேந்திரன் இயக்கும் 'மைனர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார்.

மேலும் அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள சக்தி திருமகன்  திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.  ஆனால் இதில் இடம்பெற்ற 'ஜில் ஜில்' என்ற பாடலுக்கான வரிகளை  வாகீசன் இயற்றி எழுதியுள்ளார்.  இந்த பாடலை வாகீசனும் விஜய் ஆண்டனியும் இணைந்து பாடி உள்ளனர்.


இந்த நிலையில், சக்தி திருமகன் படப் ப்ரோமோஷனின் போது  தனது  அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இலங்கை  ராப் பாடகர் வாகீசன் ராசையா. 

அதில் அவரிடம்  விஜய் ஆண்டனியின் படத்திற்கு ரெகார்ட் பண்ணும்  போது  எப்படி இருந்தது? என்று கேட்கப்பட்டது.  

அதற்கு அவர் பதில் அளிக்கையில்,  நான் ரெக்கார்ட் பண்ணும் போது  என்னோட அண்ணன் கிட்ட  பேசுற மாதிரி தான் அவர் கூட பேசுறது இருந்தது. 

எனக்கு புதுசா ரெக்கார்ட் பண்றது போல தெரியல. அந்த பீல் வரல..  எனக்கு என்ன டவுட் இருந்தாலும் அண்ணன் கிட்ட கேட்பேன்.  அவர் குழந்தைக்கு  பிள்ளைக்கு ஊசி போட்ட மாதிரி ஸ்மூத்தா என்ன பாட வச்சாரு..  

மேலும் நான் ரெக்கார்ட் பண்ணும் போது இது சரியா? பிழையா? என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் அண்ணன் கிட்ட சொல்லும் போது அது பற்றி கொஞ்சமும் முகத்தில் காட்டாமல் தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டாரு.. இதனால் எனக்கு எந்தவித பயமும் ரெகார்ட் பண்ணும் போது வரல  என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement