• May 17 2025

விஜயின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது..! – நடிகர் சிபியின் அதிரடிக் கருத்து .!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமல்லாமல் மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் உண்மையான நாயகனாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் தனது அரசியல் பயணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்து ரசிகர்களிடையே புதிய அனுபவம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளார்.


அவரது நடிப்புப் பயணம் முடிவடைகின்றது என்பதைக் கூறும் வகையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தான் தனது இறுதிப் படம் என்று விஜய் கூறியது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில், நடிகர் சிபிராஜ் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று, விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த நடிகர் சிபிராஜ், தன் மனதின் ஆழத்தில் இருந்த தளபதி பற்றிய உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நான் விஜய் சாரின் மிகப்பெரிய ரசிகன். அவர் படம் நடிக்காது இருப்பது அரசியலுக்கு சரியான முடிவாக இருக்கலாம். எனினும், ஒரு ரசிகனாக நான் அந்த முடிவை ஏற்க முடியாது. எங்களுக்காக, ஒரு வருடத்துக்கு ஒரு படமாவது நடிங்க. அதிலும் காமெடி, சண்டை எல்லாம் கலந்த படமா இருந்தாப் போதும்...” எனக் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement