தமிழ்த் திரைப்பட உலகில் இசை மற்றும் நடிப்பிற்கு பெயர் போனவர்களாக இசைஞானி இளையராஜா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளங்குகின்றனர். இருவரும் தங்கள் துறைகளில் ராஜாக்களாகவே திகழ்ந்தவர்கள்.
இவர்களது சினிமா அனுபவங்கள் பல தருணங்களில் வெவ்வேறு மேடைகளில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜாவுடன் தொடர்புடைய ஒரு முக்கிய சம்பவத்தை தனது உரையில் பகிர்ந்தார்.
அது ஒரு காலத்தில் நடந்த சம்பவம். ஒரு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இளையராஜா இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பின்னாளில் இந்திய திரைப்பட இசைத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக மாறியது. இதனால் பாடல்களுக்கு காப்புரிமை (Copyright) என்ற கோட்பாடு தமிழ் சினிமாவில் அதிக முக்கியத்துவம் பெற தொடங்கியது. இந்தச் சம்பவம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சம்பவங்களை ரஜினிகாந்த் தனது உரையில் உருக்கமாக விளக்கினார்.
ரஜினிகாந்த் கூறியதாவது, “ஒருதடவை ஒரு producer-க்கும் இளையராஜாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் இளையராஜா தனது பாடலுக்கு copy rights வாங்கிட்டாரு. அந்த நேரத்தில் SPB அமெரிக்காவில் கான்செர்ட் நடத்தி வந்தார். உடனே தகவல் அனுப்பி இளையராஜா பாடலை பாடக்கூடாது என தகவல் சொல்லியாச்சு அவரும் பாடவில்லை. பிறகு அவர் இளையராஜாவை வந்து பார்த்தார். இளையராஜாவுக்கு உள்ள திமிரு வேற யாருக்கும் இல்ல "ராஜா ராஜா தான்."
இந்த முடிவானது, தமிழ் திரைப்படத் துறையில் அதிர்ச்சியையும், புதிய புரிதலையும் உருவாக்கியது. இதுவரை பாடல்களை தயாரிப்பாளர்கள் யாரும் கேள்வி இன்றி பயன்படுத்தி வந்த சூழலில், இளையராஜாவின் இந்த நிலைபாடு திரையுலகத்தில் புதிய திருப்பத்தைக் கொண்டு வந்தது.
Listen News!