தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தளபதி விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக தனது முதல் பிரச்சார பயணத்தை திருச்சியில் ஆரம்பித்துள்ளார். தனது முதல் பிரச்சாரத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்று ஆர்வம் திருச்சி மக்களிடையே மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களிடமே காணப்பட்டது.
விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் முழுக்க விஜய் அரசியல் பற்றி பேசும் படமாகவும் இதில் நிறைய அரசியல் சார்ந்த பஞ்ச் டயலாக்குகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் அரசியல் களத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தவெக தமிழகத்தில் புதிய சக்தியாக இருக்கும் என விஜய் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டி உள்ளார். தற்போது அவர் மேடையில் பேசிய கருத்துக்கள், அரசியல் தலைவர்களை தீண்டிய பேச்சுக்கள், சவால்கள் என்பன வைரலாகி வருகின்றன.
மேலும், உங்களுடைய அன்புக்காக எவ்வளவு வருமானத்தையும் தூக்கி எறியலாம் என விஜய் பேசியது, ஒட்டுமொத்த ரசிகர்கள், தொண்டர்களையும் உணர்ச்சிபூர்வமாக அட்டாக் பண்ணி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!