‘சிறுத்தை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. இப்படம் வெற்றி பெற்றதையடுத்து, அவர் "சிறுத்தை சிவா" என அழைக்கப்படத் தொடங்கினார். அதன் பிறகு அஜித்துடன் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ என தொடர்ச்சியாக நான்கு படங்களை இயக்கினார். இதில் ‘விவேகம்’ தவிர மற்றவை வசூலில் பெரிய வெற்றிகளை கண்டன.
அஜித் – சிவா கூட்டணியில் வெளியான ‘விஸ்வாசம்’ படம் ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் பாக்ஸ் ஆஃபிஸில் மோதியபோதும், அதிக வசூல் மூலம் முன்னிலை பெற்றது. இதனால் ரஜினி அந்த படத்தை பார்த்து சிவாவின் இயக்கம் குறித்து மகிழ்ச்சியடைந்து, அவரை சந்தித்து ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதையடுத்து சிவா, சூர்யாவை வைத்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ‘கங்குவா’ படத்தை இயக்கினார். இந்த படம் புரொமோஷன் அளவில் வலுவாக இருந்தாலும், கதையில் புதியதொன்று இல்லாததால், விமர்சன ரீதியாகவும், வசூலிலும் பெரிய வீழ்ச்சியடைந்தது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இப்படத்திற்கு முதல் நாளே எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்தும் தோல்வியடைந்ததால், தற்போது சிவாவின் அடுத்த படம் குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. சினிமா வட்டாரங்களில், "சிறுத்தை சிவாவிடம் தற்போது எந்த முன்னணி ஹீரோக்களும் கதை கேட்க ஆர்வமில்லை" என்ற தகவலும் பரவி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் சிவா, ஒரு கோவிலில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது, ஒரு வரி கதையை (one-liner) விஜய் சேதுபதிக்கு சொன்னாராம். அந்தக் கதை பயங்கரமாக பிடித்திருக்க, “முழு பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்க… படிச்சுப் பாக்குறேன்” என பதிலளித்துள்ளார் விஜய் சேதுபதி.
இது குறித்து சில நெருங்கிய வட்டாரங்கள், "நான் ரஜினியையும், அஜித்தையும் வைத்து படம் எடுத்தவன்… இன்னிக்கு என் கதையை முழுதாக எழுதி அனுப்ப சொல்லுறாங்க…!" என சிறுத்தை சிவா மனமுடைந்துள்ளார் எனக் கூறுகின்றனர்.
தற்போது சிறுத்தை சிவா – விஜய் சேதுபதி கூட்டணியில் படம் உருவாகுமா? இல்லையா? என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணி உறுதிானால், அது சிவாவுக்கு மீண்டும் ஒரு ரீஎன்ட்ரி வாய்ப்பு ஆகலாம்.
Listen News!