• Jun 12 2026

நந்தினிக்கு மீண்டும் கல்யாணமா.?யோகியுடன் இருக்கும் புகைப்படங்களின் பின்னணி என்ன?

shali / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை வெற்றிகரமாக பயணம் செய்தவர்களில் ஒருவர் மைனா நந்தினி. சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் மூலம் தனது தனித்துவமான நடிப்பாலும் காமெடி டைமிங்காலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.


சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி, தனது தினசரி வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் பதிவுகள் எப்போதும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

இந்நிலையில், தற்போது அவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் இருவரும் நெருக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் தருணங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மேலும், இந்த புகைப்படங்களுக்கு “கல்யாணம் பண்ணிக்கலாமா யோகி” என்ற சுவாரஸ்யமான கேப்ஷனை அவர் வழங்கியுள்ளார். இந்த வரி ரசிகர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவு வெளியானதும் ரசிகர்கள் பலரும் லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த ரொமான்டிக் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, மைனா நந்தினியின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement