• Apr 16 2026

சிம்பு நடிக்க முடியாது என சொன்ன படத்தில் விஷ்ணு விஷால்.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு நடிக்க இருந்த திரைப்படத்தில் தற்போது விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் நடிகர் சிம்புகொரோனா குமார்என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்ததாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர்கொரோனா குமார்படம் கைவிடப்பட்டதாகவும் சிம்பு அதில் நடிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டதாகவும் தெரிகிறது.

இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நேரத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டது. லாக் டவுன் எல்லாம் முடிந்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை என சிம்பு கூறியதாகவும் அதனால் இந்த படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.



ஆனால் அதே நேரத்தில் இயக்குனர் கோகுல் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டதாகவும் சிம்பு நடிக்கவில்லை என்றால் அவருக்கு பதிலாக வேறு நடிகரை வைத்து இந்த படம் உருவாகும் என்றும் கூறியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படிகொரோனா குமார்படத்தில் சிம்புவுக்கு பதில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த கதை அம்சம் மட்டுமின்றி வேறு சில சமூக பிரச்சனைகளும் இருப்பதால் இந்த படத்தை எப்போது எடுத்தாலும் மக்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பதே இயக்குனர் கோகுல் அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே தான் இந்த படத்தை தற்போது உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

Advertisement

Advertisement