• Apr 15 2026

பாலிவுட் நடிகைகள் இப்படி தான் செய்வாங்க! விமான நிலையத்தில் மணிமேகலை செய்த ரகளை! வைரல் வீடியோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

மணிமேகலை சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி ஆவார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய பின் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் கடந்த சீசனில் இருந்து தொகுப்பாளினியாக மாறியுள்ளார்.  இந்நிலையில் பாலிவுட் நடிகைகளை கிண்டல் செய்யும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


விமான நிலையத்தில் பாலிவுட் நடிகைகள் வந்தாள் என்ன நடக்கிறதோ, அதை நகைச்சுவையான முறையில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை விமான நிலையத்திற்கு வருதைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது, அதற்கு நடிகை மிடுக்கென போஸ் கொடுப்பது என மணிமேகலை நடித்து அசத்தியுள்ளார்.


விமானத்திற்கு நேரம் ஆவதை போல் கிளம்பும்போது பத்திரிகையாளர்கள் போஸ் கொடுக்க சொல்லி கேட்பதை போன்றும், நடிகைகள் போஸ் கொடுப்பதை போன்றும் அச்சு அசலாக அப்படியே செய்து காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement