மம்மூட்டி கம்பெனியின் தயாரிப்பில் களம்காவல் எனும் திரைப்படத்தை அறிமுக இயக்குநரான ஜிதின் கே. ஜோஸ் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த படத்தில் விநாயகன், மம்மூட்டி ஆகிய நடிகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்தை மம்மூட்டியும் அவருடைய மகனான துல்கர் சல்மானும் இணைந்து தயாரித்து உள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் விநாயகன். ஆனாலும் அதற்குப் பிறகு ஒரு சில சர்ச்சைகளில் சிக்கினார்.

எனினும் இந்த படத்தில் அவருடைய நடிப்பு மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது. க்ரைம் தில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த படம் முதல் நாளில் மட்டும் 15. 7 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், களம்காவல் படம் வெளியாகி மூன்று நாட்களில் 44.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரவபூர்வமாகவே போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

தற்போது இந்த படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் நாட்களில் இந்த படம் 100 கோடி ரூபாயை தாண்டி வசூலிக்கும் என நம்பப்படுகிறது.
Listen News!