தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனது தனித்துவமான நடிப்பாலும் நகைச்சுவை நேர்த்தியாலும் ரசிகர்களின் மனதில் அழியாத கையொப்பத்தை பதித்து வரும் நடிகர் சார்லி, சமீபத்தில் தனது திரைப்பயணம் குறித்து கூறிய சில உணர்ச்சி வாய்ந்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அவர் பகிர்ந்த இந்த உரை பலரையும் ஆழமாகத் தாக்கி, ஒரு கலைஞனின் உழைப்பையும், போராட்டத்தையும் வெளிச்சம்படுத்தியுள்ளது.
நடிகர் சார்லி தனது வாழ்க்கை அனுபவத்தை குறித்து பேசியபோது, மிக நேர்மையான வார்த்தைகளில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
அதாவது, “நான் சினிமால 42 வருசமா இருந்துகிட்டு இருக்கேன்னு நினைக்கும் போதே எனக்கு சந்தோசம் தான். இதுவரை 850 படத்துக்கு மேல நடிச்சிருந்தாலும் அது சாதனை மாதிரி தெரியலாம்.
ஆனால் அதுக்காக நான் பட்ட கஷ்டமும் உழைப்பும் அது அன்றாட வாழ்வாதாரத்துக்கு தானே, தவிர அது ஒன்னும் சாதனை இல்ல. கடைசி வரை நடிச்சுகிட்டே இருக்கணும்… அது தான் என் வாழ்நாள் இலக்கு.” என சார்லி தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!