• Apr 16 2026

'தவெக' அரசியல் கட்சித் தலைவராக விஜயின் முதல் ட்வீட்! தனது பதவியை அடிக்கடி சுட்டிக்காட்டுகிறாரா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் அரசியலை மையப்படுத்தியே எடுக்கப்பட்டதாக காணப்பட்டன.

அதிலும் குறிப்பாக கத்தி, மெர்சல், சர்க்கார் போன்ற படங்களின் வாயிலாக வெளிப்படையாகவே சில அரசியல் கட்சிக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்ய ஆரம்பித்தார் நடிகர் விஜய்.

இதை தொடர்ந்து அண்மையில் தான் 'தமிழக வெற்றிக்கழகம்' என்ற பெயருடன் தனது கட்சியை பகிரங்கமாகவே அறிவித்து, கோடிக்கணக்கான ரசிகர்களின் வாக்குத் துணையுடன் தனது பயணத்தை ஆரம்பித்தார்.


இதை தொடர்ந்து அவர் வெளியிட்ட அரசியல் கட்சி தொடர்பான அறிக்கையில் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் நம்முடைய இலக்கு என்பதை குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்,நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்   தமிழக முதல்வரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி ட்வீட் பண்ணியுள்ளார்.


அதாவது, 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதேவேளை, அண்மையில் சர்ச்சையில் நடிகை திரிஷா சிக்கிக் கொண்ட போது வாய்திறக்காமல் இருந்த நடிகர் விஜய், இதுக்கு மட்டும் வாய் திறக்கிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement