• May 21 2025

ரோகிணியின் Dramaவால் வீட்டில் வெடிக்கும் பூகம்பம்.! முரட்டுத்தனமாக பதிலடி கொடுத்த விஜயா.!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரவி ஸ்ருதியை பாத்து ரொம்பவே அவசரப்படுற இப்புடி எல்லாம் செய்யாத என்கிறார். மேலும், resign பண்ணுறதுக்கு properஆன reason வேணும் அதுஇல்லாம வேலையை விட்டு நிற்கேலாது என்று சொல்லுறார். இதைக் கேட்ட ஸ்ருதி நீத்து ரெஸ்டாரெண்ட் success ஆனதுக்கு அவள் மட்டும் தான் காரணம் என்று சொல்லுறாள் அதைக் கேட்க எனக்கு கோபம் தான் வருது என்கிறார். 

மேலும் உன்னோட workஆ நீத்து மதிக்கவே இல்ல அது வருத்தமாக இல்லையா என்று ரவியைப் பாத்துக் கேக்கிறார். அதைக் கேட்ட ரவி திடீர் என்றெல்லாம் வேலையை விட முடியாது நீ கொஞ்ச நேரம் பேசாம இரு என்று ஸ்ருதியைப் பாத்துச் சொல்லுறார். இதனை அடுத்து சீதா அருண் வீட்ட போய் நிற்கிறார். அப்ப அருணோட அம்மா அருணை வேலையால நிப்பாட்டியாச்சு என்கிறார்.


அதைக் கேட்ட சீதா ஷாக் ஆகுறார். பின் சீதா அருணிடம் போய் என்ன காரணத்திற்காக வேலையால நிப்பாட்டினாங்க என்று கேக்கிறார். அதுக்கு அருண், என்ட வேலை போக காரணம் ஒரே ஒருத்தன் தான். அவனால தான் எனக்கு வேலை இல்லாமல் போச்சு என்கிறார். 

இதனைத் தொடர்ந்து மீனா தன்ர அம்மாவப் பாத்து முகம் எல்லாம் ஒருமாதிரி இருக்கு உடம்பேதும் சரியில்லையா என்று கேக்கிறார். அதுக்கு மீனாவோட அம்மா என்ர கவலையெல்லாம் சீதாவ எப்ப கல்யாணம் பண்ணிக் கொடுக்கப்போறேன் என்று தான் என்றதுடன் கொஞ்ச நாளாகவே சீதா என்கிட்ட பொய் சொல்லுறாளோ என்று தோணுது என்கிறார்.


அதைக் கேட்ட மீனா இல்ல அம்மா சீதா அப்புடி எல்லாம் பொய் சொல்லமாட்டாள் என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து சீதா மீனாவப் பாத்து நாளைக்கு என்னோட லவ்வரை introduce பண்ணிவிடுறன் வாங்க என்று சொல்லுறார். அதுக்கு மீனா சரி நாங்கள் வாறோம் என்று சொல்லுறார். பின் விஜயா ரோகிணியப் பாத்து இவளா நேரமும் எங்க போய்ட்டு வாற என்று கேக்கிறார்.

அதுக்கு ரோகிணி இந்த செயினை உங்களுக்கு வாங்கத் தான் போனேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா நீ வாங்கிக் கொடுத்தோன நான் உடனே அதை வாங்கிடோணுமோ என்று கேக்கிறார். அதனை அடுத்து முத்து இந்த நகை அம்மாவுக்கு வேணாமாம் அப்ப மீனா நீ தைப் போடு என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement