• Sep 17 2025

சூடுபிடிக்கும் ‘இட்லி கடை’... யூடியூபில் வெளியான மூன்றாவது பாடல்.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பல்திறமை வாய்ந்த நட்சத்திரம் தனுஷ், தற்போது இயக்கும் திரைப்படம் தான் “இட்லி கடை”. இப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தும் இருக்கிறார். ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இப்படத்தின் மூன்றாவது பாடல், “என் பாட்டன் சாமி வரும்..”, லிரிக்கல் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.


இந்த பாடல் வெளியாகியவுடன், சமூக வலைத்தளங்களில் #EnPaattanSaamiVarum என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. பாடலின் வரிகள், இசை, மற்றும் வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்ட காளை என அனைத்தும் சேர்ந்து தனுஷ் ஸ்டைலை நமக்கு மீண்டும் நினைவூட்டுகின்றன.

தனுஷ், இதற்கு முன்பு இயக்கிய "பா.பாண்டி" போன்ற படங்கள் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. தற்போது அவர் இயக்கும் மூன்றாவது படமான “இட்லி கடை”, ஒரு கமர்ஷியல் வாழ்க்கை கதையாக உருவாகி வருகிறது என கூறப்படுகிறது.


இந்த திரைப்படத்தில் தனுஷ், ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கையில் இருந்து, சமூக சிக்கல்களை எதிர்கொள்வது போன்ற கதையில் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இதில் சில முக்கிய நடிகர், நடிகைகள் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் இசையை உருவாக்கியுள்ளார் ஜிவி பிரகாஷ் குமார், இவர் தனுஷுடன் ஏற்கனவே "அசுரன்"  போன்ற ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.


Advertisement

Advertisement