தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பாலும், சிறந்த கதாபாத்திரங்களுக்காகவும் புகழ் பெற்ற நடிகை மீனா, தனது சினிமா வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்றதோடு, சில இழப்புகளையும் அனுபவித்திருந்தார். சமீபத்தில் ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், நடிகை மீனா பெரும் வாய்ப்பு இழந்ததை பற்றி நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் கூறியிருந்தார்.
அந்த நேர்காணலில் மீனா கூறியதாவது, "நான் ‘வாலி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டியிருந்தது. அஜித் சார் உடன் சேர்ந்து ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்கான ஆசை எனக்கு இருந்தது. ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக அந்த வாய்ப்பு என் கையிலிருந்தும் போய் விட்டது. அதை இன்று வரை நினைத்து கவலைப்படுறேன்."
இந்த ஒரு வரி, சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், "வாலி" திரைப்படம் என்பது அஜித்தின் கரியரில் மிக முக்கியமான திருப்புமுனையாக இருந்த திரைப்படமாகும்.
அப்படத்தில் மீனா நடித்திருந்தால், படம் எப்படியிருக்கும் என்ற சிந்தனை தற்போது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Listen News!