அமரன் திரைப்பட வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் செப்டம்பர் 5ஆம் திகதி வெளியான மதராஸி படம் தற்போது ஓரளவுக்கு வசூலைப் பெற்றுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்த படத்தில், வில்லனாக வித்யூத் ஜம்வால் நடித்திருந்தார்.
காதலியை மீட்க வில்லன் குரூப்புடன் போராடும் நாயகனின் கதை, அதிரடி காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்தது.
அமரன் படத்தைப் போல பெரிய அளவில் பாராட்டுகள் கிடைக்காவிட்டாலும், மதராஸி 11 நாட்களில் 90 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் தமிழ்நாட்டிலேயே 55 கோடி வசூல் செய்திருப்பதாகவும், சிலர் படம் 100 கோடியைத் தாண்டிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
ஆனால், தயாரிப்பாளர் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.
இந்நிலையில், முருகதாஸுடன் மீண்டும் சிவகார்த்திகேயன் இணைவதாக சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகின்றன.
மதராஸி படப்பிடிப்பு நடந்தபோது முருகதாஸ் கூறிய மற்றொரு கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்ததாகவும், அதில் அவருக்கு அதிக நடிப்பு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும், மேலும் வெங்கட் பிரபுவுடனும் ஒரு படம் பேசப்பட்டு வருகிறது.
எனவே, முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் இணையும் அடுத்த திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!