தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட நடிகை திரிஷா. இவர் அழகும் நடிப்பும் ஒன்றாக கலந்த நடிகையாக, பல ஆண்டுகளாக திரைத்துறையில் முன்னணியில் திகழ்கின்றார். சமீபத்தில், தனது எளிமையான செயல் மூலமாக மீண்டும் ஒரு முறை ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் திரிஷா கலந்துகொண்டிருந்தார். அந்நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறிக் கிளம்பும் போது, அவரை எதிர்பார்த்துப் காத்திருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்களை பார்த்தவுடன், புன்னகையுடன் கையை அசைத்து வணக்கம் கூறினார். அதுமட்டுமல்லாமல் அனைவரையும் கவரும் விதமாக ஒரு பாசமிகுந்த முத்தமும் கொடுத்திருந்தார்.
அந்த இனிய தருணம் கேமராவில் பதிவு செய்யப்பட்டதோடு, தற்போது அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகின்றது. ரசிகர்கள் அனைவரும் “இதுதான் ரியல் ஸ்டார்..!” எனக் கூறி திரிஷாவை பாராட்டி வருகின்றனர்.
2000களில் திரையுலகில் அறிமுகமான திரிஷா, மௌனம் பேசியதே, சாமி, கிரீடம், கொடி போன்ற பல வெற்றிப் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். இன்று வரை, தனது அழகு, பணிவு மற்றும் திறமை மூலமாக ரசிகர்களிடையே அசையாமல் நிலைத்திருக்கிறார்.
அத்தகைய நடிகையின் இந்தச் சிறிய செயல் அவரது பெரிய மனதையும், ரசிகர்கள் மீது கொண்ட அன்பையும் வெளிப்படுத்துகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் திரிஷா இன்னும் பல ஆண்டுகள் திரையுலகில் ஒளிரட்டும் என வாழ்த்தி வருகின்றனர்.
Listen News!