விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை பட புகழ் நடிகை தனுஸ்ரீ தத்தா, கடந்த பல ஆண்டுகளாக பிக் பாஸ் reality showக்கான அழைப்பு வந்ததாக சமீபத்தில் பேட்டி அளித்தார்.
ஆனால், பல கோடி சம்பள சலுகைகள் வந்தாலும் அவர் அதனை நிராகரித்துள்ளார். இதுபற்றி தனுஸ்ரீ அளித்த பேட்டியொன்றில்,
"பிக்பாஸ் வர 1.65 கோடி ரூபாய் தர முன்வந்தார்கள், ஆனால் அதையும் நான் மறுத்துவிட்டேன். அவர்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் நான் போக மாட்டேன்."
மேலும், ரியாலிட்டி ஷோக்களில் பெண்கள் வேறு ஆண்களுடன் ஒரே படுக்கையில் இருப்பது போன்ற தோற்றம் தருவது அவருக்கு ஏற்றதல்ல என்றும், தனது கண்ணோட்டத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்:
அதேவேளை "என்னை பார்த்தால் ரியாலிட்டி ஷோவுக்காக வேறு ஆண்களுடன் ஒரே படுக்கையில் படுக்கும் பெண் போல தெரிகிறதா?"எனவும் கேள்ளியெழுப்பியுள்ளார்.
இதுவரை ஹிந்தியில் பிக் பாஸ் 19 ஆவது சீசன் தொடங்கியுள்ளது. தமிழில் பிக் பாஸ் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகவிருக்கிறது.
இந்நிலையில் தனுஸ்ரீ நிராகரிப்பின் பின்னணி, ரசிகர்களுக்கு வலுவான எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலை, பிக் பாஸ் சீசன் தொடங்கும் முன் ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
Listen News!