• Sep 16 2025

ரசிகர்களுக்கு சிறப்பு பரிசு: விஜய்யின் குஷி திரைப்படம் மீண்டும் ரிலீஸ்..!

luxshi / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழில் வெற்றி பெற்ற பழைய திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் வெளியிடும் நடைமுறை தொடர்ந்து வரும் நிலையில், 2000 ஆம் ஆண்டில் வெளியான ‘குஷி’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளது.


இப்படத்தை இயக்குநர் எஸ். ஜே. சூர்யா இயக்கியிருந்தார். விஜய், ஜோதிகா ஆகியோர் ஜோடியாக நடித்த இந்த படத்தில் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.


இசையமைப்பாளர் தேவா இசையமைத்த இந்த படத்தின் கட்டிப்புடி கட்டிப்புடிடா, ரேக்கவீனா, ஒரு பொண்ணு ஒண்ணு, மேகம் கருக்குது உள்ளிட்ட பாடல்கள் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றன.

கடந்த 2000 மே 19 ஆம் திகதி வெளியான இந்த படம், 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி, விஜய்யின் திரைப்பட பயணத்தில் ஒரு முக்கிய படமாக அமைந்தது.

இந்நிலையில், ‘குஷி’ திரைப்படம் வரும் 25 ஆம் திகதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement