பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாண்டியனோட அக்கா பாண்டியன் வீட்ட வந்து அரசிக்கும் சதீஸுக்கும் கல்யாணம் பண்ணிவைப்போமா? என்று கேட்கிறார். அதைக் கேட்ட எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். இதனை அடுத்து சதீஸும் தனக்கு அரசியை கல்யாணம் பண்ணிக் கொடுக்கச் சொல்லுறார். மேலும் பாண்டியனோட அக்கா என்ன முடிவு சொல்லப்போறீங்க என்று கேட்கிறார்.
இதனை அடுத்து வடிவு கிட்ட குமாரோட அம்மா குமார் சாப்பிடாமல் இருக்கிறான் என்று சொல்லி கவலைப்படுறார். அதைக் கேட்ட பாட்டி அவன் தான் பண்ண தப்பெல்லாத்தையும் யோசிச்சுப் பாக்கிறான் போல என்கிறார். அதைத் தொடர்ந்து சுகன்யா சக்திவேல் வீட்ட வந்து அரசியை பொண்ணு பார்க்க வந்திருக்காங்க என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட குமார் கவலைப்படுறார். பின் பாண்டியன் இது அரசியோட வாழ்க்கை அவளிட்ட போய் முடிவை கேட்கிறேன் என்கிறார். இதனை அடுத்து அரசி தனக்கு இப்ப கல்யாணம் வேணாம் என்று சொல்லுறார். மேலும் நான் என்னை கொஞ்சம் சரி பண்ணனும் அதுக்குப் பிறகு இதை பற்றி யோசிக்கலாம் என்கிறார்.
பின் பாண்டியன் தன்ர அக்கா கிட்ட இந்த கல்யாணம் வேணாம் என்கிறார். அத்துடன் உங்க பையனுக்கு வேற யாரும் பொண்ணை பார்த்துக் கல்யாணம் பண்ணி வையுங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து குமார் தன்ர பாட்டி கிட்ட நான் செய்தது எல்லாம் தப்பு என்று சொல்லி கவலைப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!